Soft"where" ? நட்பு
கங்குலியும் வடிவேலும், தல Vs தளபதி - என சிலநோடி சிரிக்கவைத்த 'Forward Mail'கள்!!!
அமெரிக்க முதலாளிக்கு காலைவணக்கம் சொல்ல ஒன்றாக தூக்கம்தொலைத்த இரவுகள்!!
கணினிக்குள் புதைந்திருந்த C Programஐ, கைகோர்த்து கருத்தரித்த Project Deadlineகள்!!
ஐந்துநாளாய் சேகரித்த வெறுப்பையும் ஒரேநாளில் 'நீர்' ஊற்றியனைத்த Weekend கொண்டாட்டங்கள்!! - என
இயந்திரங்கள் நிரம்பிய அலுவலக இருக்கைகளில், இதமான தென்றலாய் சில நட்புகள்,
'I am quitting' Keep in touch, என்ற சம்பிரதாய அறிவிப்பில் சத்தமில்லாமல் சமாதியாகிறது!
அவர்களிருந்த இருக்கைகளில் கட்டாயமாய் ஒட்டப்பட்ட புன்னகையோடு இன்று வேறு சிலர்!!
'Symonds Vs Singh' - அவர்களிடமிருந்தும் 'Fwd: Mail'. கம்பூயுட்டரைப்போல் நானும் 'ReStart' செய்கிறேன், நட்பை......
Soft where? நட்பை!!!
-
கெ.கார்த்திக் சுப்புராஜ்.
1 Comments:
சூப்பர் கவிதை பாஸ். கலக்கீட்டீங்க.. நல்ல வேளை நான் இந்த மாதிரியான கான்கிரிட் காடுகளில் சிக்கவில்லை..
Post a Comment
<< Home