Monday, October 02, 2006

அக்கரை சீமை அழகினிலே - பகுதி 1

அவர்களை நான் முதலில் சந்ததித்தது ஒரு இந்திய உணவு விடுதியில்,வாடகை கொடுக்க அங்கே வரச்சொன்ன house owner, தேவைஇல்லாமல் 15 பவுண்ட் billai போட்டததோடு, இந்த தம்பதியினரை அறிமுகப்படுத்தினார். ( தம்பதியினர் என்றால், திருமணமானவர்கள் என்று நிங்கள் நினைத்தால், அது உங்கள் தப்பு ). 'Hii, wassup', என்று தொடங்கிய உரையாடல், பிறகு 'அட நிங்க நம்ம தெருதானா' என்று முடிந்தது!!...முடிஞ்சா வீட்டுக்கு வாங்க!!,என்று, அன்று கிளம்பியாச்சு.

பிறகு, முன்றாவது சந்திப்பில், அவர்களின் சுயசரிதை கூறலானார்கள்!!,..முதலில் அவர்களது காதல் கதை!!.."ஒரு அந்தி வெயில் மாலை நேரம்,..சில்லென்ற தென்றல் விச, மின்னல் போல, என் முன்னெ அவள்." என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த வேளையில்,..அவளை சந்தித்தது ஒரு pub'ல(நம்ம TAASMAC மாதிரி..)என்று தொடங்கினார் ,..நான் அன்னைக்கு புல் மப்புல இருந்தென்,..ஏகுத்தாப்புல தான் இவ இருந்தா,..அவளும் என்னை பார்த்தா,..அப்புறம் அவ எந்திருச்சு போகும் போது,.அவளை நான், 'Waana dance' என்றேன்..'Sure' என்றாள்,!!!

ம்ம்...அப்புறம்!!! - இது நான்

அப்புறமென்ன,..அன்று முதல் நாங்கள், 'Going around till now',..

அவளோதானா????,..அடப்பாவிகளா!!,..Train, busனு பாலோ பண்ணி,..மொட்டை மாடியில் உட்காந்து கவிதை எழுதி,..அத கொடுக்க ஆள் தெடி,..அடி வாங்கி,..தவமாய் தமிருந்து,..காதலிச்ச கல்லூரி நண்பர்களை, நினைத்தால்,..ஐயோ,..ஐயோ!!! (இந்த 'ஐயோ' வை வடிவேல் போல வாசிக்கவும்)..பாவம் நம்ம முரளியும்,..மோஹனும் (நடிகர்கள்),..எத்தன பாட்டு பாடியிருப்பார்கள்!!!

ம்ம் matterukku வருவோம்,..

காதல் கதையை சொல்லி முடித்ததும்,.."என் வயசு என்னெனு தெரியுமா??" என்றார்,...

சொன்னாத்தான தெரியும்! - இது என் உள் மனது,..

36..,

ஆ!!, அப்படியா, உன் வயசு பசங்களோட மட்டும் சேருப்பானு, பாட்டி சொன்னது நினைவிக்கு வந்தது.

அவருக்கு வேலையில்லைனு,..மொதவெ சொன்னாரு.. (இது வேறயா!!!)..

அவருடன், எப்படி இத்தனை வருடமா ஒன்னா இருக்கிங்க அம்மனி??..

எத்தனை வருசமா?,..ஹிஹி,..நாங்கள் முதலில் கூறிய அந்த pub சம்பவம் நடந்து,..முனு மாசத்துக்கு முன்னாடி தான்!!..

அப்போ நீங்க, அதுக்கு முன்னாடி? college படிச்சுட்டிருந்திங்களா?...

collega??, நானா ?? ( soap விளம்பரத்துல வர மாதிரி இலுத்துட்டு)..

u know how old is my kid?? 13yrs...ஒரே பெருமிதம்!,..

நீங்க uncle?,...Mine is 5 yr old,..ரெண்டுபெருக்கும் தத்தம் முன்னாள் ஜோடி என்ன செய்கிறார்கள் என்று தெரியாது!!

போதும்டா டேய்!!,..'உங்க கதை என்னடா இப்படி காரி துப்புரமாதிரி இருக்கு'!!

தொடர்ந்து பேசியதிலுருந்து 'இந்த ஊரில்,.இதெல்லாம் சகஜமப்பா' என்று விளங்கியது,..அவர்களுக்கு இன்றும் புரியாத புதிராக இருப்பது,..நம்மூரில் நடக்கும்,arranged marriage!!,..அதெல்லாம் இங்கே சத்தியமாக வாய்ப்பில்லை என்று உறுதி அளித்தனர்...அதிலும் '7/10 arranged marriage are successful' என்று எங்கோ படித்திருக்கிறார்கள்..'Its Magical' என்றார்கள்..

'That's India!!' .. 'சிங்கமுல நாங்க!!' என்று சொல்லனும் போல இருந்தது!!!


ok,..then what else!!??

what elseaa...எடத்த காலி பண்ணுங்க,..காத்து வரட்டும்,!!

see u bye,..

அவர்களின் சந்திப்பு,..தலைசுற்ற வைத்தது!!,..இது தான் அண்ணிய கலாசாரமா!!!,..

தரகர் கூட்டிபோன வீட்டில் பெண் பார்த்து,உறுதி பேசி,நிச்சயதார்த்தம் செய்து,முகூர்த்த கால் நட்டு,மாப்பிள்ளை அழைத்து,நழுங்கு வைத்து,சீர் செய்து,தாலி கட்டி,மறுவீட்டு விருந்து வைத்து,பெண்னை அனுப்பிவைக்கும்...நம்ம கலாச்சாரம்,..உலகில் எங்கு சென்றாலும் நம்மை தலைநிமிரச்செய்யும்!!

ஆனால், சமிப காலங்களில், வெளிநாட்டில் இருந்து திரும்பும் தமிழர்கள்,..செண்டு பாட்டில்,..ஸ்காட்ச் விச்கியோடு சேர்த்து இந்த வெளிநாட்டு கலாச்சாரத்தையும் இறக்குமதி செய்கிறார்கள்!!,..அதன் விளைவுதான் Live in,.Divorce எல்லாம்!!

அன்பார்ந்த Hi-FI Dude's களே,

COKE,KFC,PiZZA HUT,METTALICA,heavy metal,PUB HOP,COFFEE DAY,FRIDAY FEVER,என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள்!!

தமிழனுக்கு, தமிழனாக இருக்கும் வரைதான், மரியாதை!!!!

5 Comments:

At 7:47 AM, Blogger Jeevish Glastine said...

thala,, varum bothu thaniyaa thaan varuveengala,, illa kuda innoru ticketoda varuveengalaa??

 
At 7:53 PM, Blogger Ekanth said...

Good post da..andha urai aadal karpanai-ya illa nijamaa? nalla irundhadhu..keep blogging..

 
At 7:54 PM, Blogger Ekanth said...

Good post da..andha urai aadal karpanai-ya illa nijamaa? nalla irundhadhu..keep posting

 
At 3:04 PM, Anonymous Anonymous said...

aiyo..aiyo...ore thamasha irukku da mappi....
keep it going...

 
At 8:23 AM, Anonymous Anonymous said...

I like the natural dialect u use maappu... Paecchu vazhakkulayae nee ezhudhuradhunaala easy a kadhayoda otta mudiyudhu. Cool da :)

And a suggestion... Try this link for typing in Tamil. That'd help u avoid spelling mistakes in ur post.

Keep up the good work...

Cheers,
Yogaesh.

 

Post a Comment

<< Home

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative