Wednesday, December 08, 2010

கடன் படுவோம்.....

முதல் கடன் கேட்ட நாளுக்கும்,
முழு கடன் அடைத்த நாளுக்கும்
இடையே இருக்கும் காலம் தான் வாழ்கை - 
பொறுப்புணராமல், பொறுப்பில்லாமல் கழியும் நாட்கள் கணக்கில் வருவதில்லை....!!!

-

கெ.கார்த்திக் சுப்புராஜ்...


Labels: ,

Friday, March 13, 2009

ஊன விருட்சம்

முகமறியா சிலரின்
இரக்ககுணம் கண்டும்,
காண முடியாத,.. 
நன்கொடை பட்டியல் ...

எதிரே நிற்பவனின்,
சோகக்கதை தெரிந்தும்
சொல்ல  முடியாத,
வேண்டுகோள் கடிதம்..

அவன் சொல்லிய,
சொல்லவந்த எதையும்
காது கொடுத்து  
கேட்காத நான்..

என அங்கிருந்த
அனைத்தையும் ஊனமாக்கி 
சென்றான்,...

படிக்க உதவி கேட்டு,.
பேப்பரயும், அரைகூயர் நோட்டயும்ை
நீட்டிய - சிறுவன்!!

-

கெ.கார்த்திக் சுப்புராஜ் 


Monday, February 23, 2009

விதை வினை

"நாம் அறுக்க முற்படும் சமுதாய களைகளை,..
விதைத்தது யார் ??.... விதைத்தவன் தானே வினையறுப்பான்."

தினமும் சந்திக்கும் சாமானியரிடம் நாம் காட்டும் ஒரு நிமிட அலட்சியம்,.. கோபம்,.. திமிர்,.. ஆதிக்கத்தின் விளைவை அலசும் ஒரு குறும்படம்,... 'Cause and effect'. 

பார்த்துவிட்டு,.. உங்கள் கருத்தை விட்டுச்செல்லுங்கள்.




Labels: ,

Thursday, January 08, 2009

IBNliveல் எனது குறும்படம்

நான் சமீபத்தில் இயக்கிய குறும்படம், IBNlive.com ல் இடம் பெற்றுள்ளது.பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை விட்டு செல்லுங்கள்.
http://ibnlive.in.com/videos/82286/let-us-do-more-to-make-india-safer-says-nri-engineer.html

என்னுடைய மற்ற படங்கள் காண, இங்கே சொடுக்கவும்.

www.reel-dreams.blogspot.com

Tuesday, October 07, 2008

குறும்படங்கள்!!!

கனவை மெய்படச்செய்யும் முயற்சியாக,நான் இதுவரை இயக்கிய குறும்படங்களின் தொகுப்பு இந்த வலைப்பதிவில்

http://www.reel-dreams.blogspot.com/

பாத்துட்டு உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க


Labels:

Thursday, July 03, 2008

செங்கல் வலை

கொசுக்களுக்கு
பயந்து,

மூடப்பட்டே
இருக்கிறது,

என் APARTMENT
கதவுகள்!!.

கொசுக்களுக்கு
தெரிந்து

இருக்கக் கூடும்,
என் எதிர்

வீட்டுக்காரனின்,
பெயர்!!!

-
கார்த்திக் சுப்புராஜ்

Wednesday, April 09, 2008

அந்தபுரத்து காதல் கதை

ஒருநாளில் பலமுறை
அவனுக்கு காதல்
வரும்! - என்போன்றவள் மீது!

அவனுக்கு காதல்வரும்
தருணங்களில், அவன் கை
வசப்படுவாள் - எங்களுள் ஒருத்தி!

அந்த நாள் அந்த நொடி
அவனது காதலுக்கு
கைவசப்பட்டவள் - நான்!

பிறந்ததில் இருந்தே
பெட்டிக்குள் அடைக்காத்ததுபோல்
வளர்ந்தவள் - நான்!

இருப்பிடம்விட்டு வந்ததும்
இல்லை, சென்றவர்களின்
அனுபவம் கேட்டதும் இல்லை!

வெட்கமும் பயமுமாயிருந்த
என்னை சட்டென
தொட்டது, அவன்விரல்!

அடுத்தநொடியில் தொலைந்தது
வெட்கம். அனலாய்
கொதித்தது - என்தேகம்!

அவன்விரல் என்மீதிருந்த
நேரமெல்லாம் உடலில்
பரவியது காதல் தீ !

அந்தவேட்கையில் பற்றி,
நானே எரிவதை
போலொரு உணர்வு!

என்னைபோல் எரியும்
காதலோ, உணர்ச்சியோ,
துளியுமில்லை அவனிடம்!

அவனுக்குநான் எத்தனாவது
காதலியோ?. ஒருவேளை
இருந்திருக்கலாம் முதல்காதலியுடன்!

அவன்புரிவது காதலோ,
கடமையோ எனக்குஅவனே
முதல்காதலன் கடைசிவரை!

அலட்சியமாய் சுவாசித்தான்
என்னை, - சுவாசிக்கப்பட்டு
சுவாசித்தேன் அவன்காதலை!

அவன்விரல்கள் எப்போதும்
என்மீதே இருந்தது.
அவனிதழ்கள் அவ்வப்போது!

இதழ்பட்ட நேரங்களில்,என்
அச்சம்,மடம் நானமெல்லாம்,
பொறுக்காமல் புகையானது!

இப்படி காதலில் முழ்கிப்பின்
மீண்டபோது மொத்தமாய்
கரைந்திருந்தது என்தேகம்!

அதுவரை அனையாமலிருந்த
காதலை,ஏனோ தெரியவில்லை
சட்டென்று அனைத்துவிட்டான்!

அனைத்தது மட்டுமில்லை
அதன்பின் அலட்சியமாய்
விட்டுவிட்டு விடைபெற்றான்!

மாடத்தில் தோழிகளுடன்
மகிழ்ச்சியாய் பொழுதை
கழித்திருந்த என்னை!

அவன் சில நொடி காதலுக்கு
இரையாக்கி பின் என்னை
குப்பையாக்கி சென்றுவிட்டான்!

அதுவரை புனிதமாயிருந்த
காதல், மாறியது
வலியாய் ரனமாய்!

அவனை போன்றோரின்
ஆசைக்கிணங்கி அழிவதற்காகவே
படைக்கப்பட்டது எங்கள் இனம்!

அவன்மீண்டும் வருவான்,
வேறொருவளை தோடுவான்,
பின்னென்னருகே வீசிடுவான்!

எங்கள்தேகம் அழித்து
வளர்த்த காதலின்புனிதத்தை
என்றாவதொரு நாள், உணர்வான்!

காதல் புரிந்து
கைவிட்டவன், அந்த காதலாலே
ஒரு நாள் அழிவான்!

அந்த நாள் அவன்தேகமும்
அனலாய் கொதிக்கும்,
எரியும், புகையும்!

அப்போது அவன் சொல்வான்,
"நான் அவளை
தொட்டிருக்கவே கூடாது" - என்று

--இப்படிக்கு,
சற்றுமுன் அடித்து,
அனைத்து, வீசப்பட்ட
ஒரு சிகரெட் !!!!!!!!

-கெ.கார்த்திக் சுப்புராஜ்.

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative