Sunday, September 17, 2006

கலியுக கருணை!!

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட,
‘Reservation Form’ நிரப்பத் திணறிய
பாட்டி!!

பேருந்தில் என் சீட்டருகே,
கால்வலிக்க நின்றிருந்த
தாத்தா!!

பையனுக்கு புத்தகம்
வாங்க கடன்கேட்ட
வேலைக்காரி!!

சிக்னலில் கைக்குழந்தையின்
பசியைக்காட்டி பிச்சைகேட்ட
சிறுமி!!

பஸ்-ஸ்டாண்ட் வாசலில்
‘மோகன் ஹிட்ஸ்’ பாடிக்கொண்டிருந்த
கண்ணிழந்த பாடகன்!!

பிளாட்பாரத்தின் நடுவில்
முருகன் கோலம் போட்டிருந்த
காலிழந்த ஒவியன்!!

காபிகுடித்த ஹோட்டலின்
கல்லாவிலிருந்த ‘நிவாரண நிதி’
டப்பா!!

முதியோர் இல்லத்திற்கு
உதவித்தொகை கேட்டுவந்திருந்த
இளம்பெண்!! என

யெல்லோரையும் தவிர்த்துவிட்டு,
வேகமாய் ஆபிஸ் விரைந்து,

இருபது பேருக்கு கருணையோடு
அனுப்பிவைத்தேன்,

‘Please forward to all your friends’ - என
குழந்தையின் ஆபரேசனுக்கு,
பணம் சேர்க்க, யாரோ
அனுப்பியிருந்த ‘FORWARD MAIL’ஐ ..!!!

1 Comments:

At 1:24 PM, Blogger karthik subbaraj said...

Thanks for your comments

 

Post a Comment

<< Home

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative