Monday, September 18, 2006

பணவாசம்

இதுவரை நான்,
கேட்டிராத மொழி,
சேர்த்திராத பணம்,
வாழ்ந்திராத புது உலகம் - இந்த அயல்நாட்டுலகம்!!

முன்பு ஏகத்தாளமாய்
நிராகரித்த இட்லிக்கும்,
சாம்பாருக்கும் - ஏங்கவைத்துவிட்ட,
புது உலகம்!!

புரியாமல் ரசித்த
ஆங்கிலப்பட டயலாக்குகள்,
புரிந்தும் வெறுக்கவைத்த,
புது உலகம்!!

படத்தில் மட்டும் பிரம்மித்த
London bridge'ம், Big Ben'ம்
அருகில் இருந்தும் - அலுத்துவிட்ட,
புது உலகம்!!

திறந்த ஜன்னலும், இருண்டவானமும்,
இளையராஜா ஹிட்சும்,
பிரியாநண்பர்களாக்கிவிட்ட,
புது உலகம்!!

பரந்துகிடந்த என்,
உறவையும் நட்பையும்,
ஒரு cellphone'க்குள் சுருட்டிவிட்ட,
புது உலகம்!!

சந்தோசம், சோகமெனயெனைத்தையும்,
E-MAIL ATTACHMENT'ஆக அனுப்பவைத்த,
புது உலகம்!!

திரைகடலோடவைத்து,
திரவியம்தேடவைத்து,
பணவாசம்பூண்டவைத்து,
இப்படியோர் உலகை பரிசளித்த - விஞ்ஞானமே!!!

முடிந்தால்,

FILE -> 'SAVE AS' என்பது போல்,
LIFE -> 'SAVE AS' எனயெதையாவது கண்டுபிடி!!,

யெனென்றால், நாங்கள்

தேடிக்கொண்டிருப்பது திரவியமென்றாலும்,
தொலைத்துகொண்டிருப்பது என்னவோ,

வயதையும்..வாழ்கையயும் தான்!!!

- கெ.கார்த்திக் சுப்புராஜ்

5 Comments:

At 8:18 AM, Blogger கதிர் said...

இதுதான் நவீன கவிதையா?

ரொம்ப அருமையா வித்யாசமா இருக்குngka கார்த்திக்!

 
At 1:23 PM, Blogger karthik subbaraj said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!

 
At 9:38 PM, Blogger பிரபு said...

அப்படியே நானும் கருத்து எழுதலாம்னு நினைச்சா வரமாட்டேங்குது..

இன்னும் வளர வாழ்த்துக்கள்

 
At 8:27 AM, Anonymous Anonymous said...

Onsite namma vaazhkaya eppidi gilpaastri pannirucchu nu super a sollirukka maapla! Onsite vandhirundha ellaarukkum kandippaa idhu takku nu pidicchurum! :)

Cheers,
Yogaesh

 
At 11:41 AM, Blogger Aruna said...

//தேடிக்கொண்டிருப்பது திரவியமென்றாலும்,
தொலைத்துகொண்டிருப்பது என்னவோ,

வயதையும்..வாழ்கையயும் தான்!!!//

அழகான கவிதை...கொஞ்சம் மனசைக் காயப் படுத்தவும் செய்தது..
அன்புடன் அருணா

 

Post a Comment

<< Home

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative