Monday, September 18, 2006

பணவாசம்

இதுவரை நான்,
கேட்டிராத மொழி,
சேர்த்திராத பணம்,
வாழ்ந்திராத புது உலகம் - இந்த அயல்நாட்டுலகம்!!

முன்பு ஏகத்தாளமாய்
நிராகரித்த இட்லிக்கும்,
சாம்பாருக்கும் - ஏங்கவைத்துவிட்ட,
புது உலகம்!!

புரியாமல் ரசித்த
ஆங்கிலப்பட டயலாக்குகள்,
புரிந்தும் வெறுக்கவைத்த,
புது உலகம்!!

படத்தில் மட்டும் பிரம்மித்த
London bridge'ம், Big Ben'ம்
அருகில் இருந்தும் - அலுத்துவிட்ட,
புது உலகம்!!

திறந்த ஜன்னலும், இருண்டவானமும்,
இளையராஜா ஹிட்சும்,
பிரியாநண்பர்களாக்கிவிட்ட,
புது உலகம்!!

பரந்துகிடந்த என்,
உறவையும் நட்பையும்,
ஒரு cellphone'க்குள் சுருட்டிவிட்ட,
புது உலகம்!!

சந்தோசம், சோகமெனயெனைத்தையும்,
E-MAIL ATTACHMENT'ஆக அனுப்பவைத்த,
புது உலகம்!!

திரைகடலோடவைத்து,
திரவியம்தேடவைத்து,
பணவாசம்பூண்டவைத்து,
இப்படியோர் உலகை பரிசளித்த - விஞ்ஞானமே!!!

முடிந்தால்,

FILE -> 'SAVE AS' என்பது போல்,
LIFE -> 'SAVE AS' எனயெதையாவது கண்டுபிடி!!,

யெனென்றால், நாங்கள்

தேடிக்கொண்டிருப்பது திரவியமென்றாலும்,
தொலைத்துகொண்டிருப்பது என்னவோ,

வயதையும்..வாழ்கையயும் தான்!!!

- கெ.கார்த்திக் சுப்புராஜ்

Sunday, September 17, 2006

கலியுக கருணை!!

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட,
‘Reservation Form’ நிரப்பத் திணறிய
பாட்டி!!

பேருந்தில் என் சீட்டருகே,
கால்வலிக்க நின்றிருந்த
தாத்தா!!

பையனுக்கு புத்தகம்
வாங்க கடன்கேட்ட
வேலைக்காரி!!

சிக்னலில் கைக்குழந்தையின்
பசியைக்காட்டி பிச்சைகேட்ட
சிறுமி!!

பஸ்-ஸ்டாண்ட் வாசலில்
‘மோகன் ஹிட்ஸ்’ பாடிக்கொண்டிருந்த
கண்ணிழந்த பாடகன்!!

பிளாட்பாரத்தின் நடுவில்
முருகன் கோலம் போட்டிருந்த
காலிழந்த ஒவியன்!!

காபிகுடித்த ஹோட்டலின்
கல்லாவிலிருந்த ‘நிவாரண நிதி’
டப்பா!!

முதியோர் இல்லத்திற்கு
உதவித்தொகை கேட்டுவந்திருந்த
இளம்பெண்!! என

யெல்லோரையும் தவிர்த்துவிட்டு,
வேகமாய் ஆபிஸ் விரைந்து,

இருபது பேருக்கு கருணையோடு
அனுப்பிவைத்தேன்,

‘Please forward to all your friends’ - என
குழந்தையின் ஆபரேசனுக்கு,
பணம் சேர்க்க, யாரோ
அனுப்பியிருந்த ‘FORWARD MAIL’ஐ ..!!!

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative