Wednesday, April 09, 2008

அந்தபுரத்து காதல் கதை

ஒருநாளில் பலமுறை
அவனுக்கு காதல்
வரும்! - என்போன்றவள் மீது!

அவனுக்கு காதல்வரும்
தருணங்களில், அவன் கை
வசப்படுவாள் - எங்களுள் ஒருத்தி!

அந்த நாள் அந்த நொடி
அவனது காதலுக்கு
கைவசப்பட்டவள் - நான்!

பிறந்ததில் இருந்தே
பெட்டிக்குள் அடைக்காத்ததுபோல்
வளர்ந்தவள் - நான்!

இருப்பிடம்விட்டு வந்ததும்
இல்லை, சென்றவர்களின்
அனுபவம் கேட்டதும் இல்லை!

வெட்கமும் பயமுமாயிருந்த
என்னை சட்டென
தொட்டது, அவன்விரல்!

அடுத்தநொடியில் தொலைந்தது
வெட்கம். அனலாய்
கொதித்தது - என்தேகம்!

அவன்விரல் என்மீதிருந்த
நேரமெல்லாம் உடலில்
பரவியது காதல் தீ !

அந்தவேட்கையில் பற்றி,
நானே எரிவதை
போலொரு உணர்வு!

என்னைபோல் எரியும்
காதலோ, உணர்ச்சியோ,
துளியுமில்லை அவனிடம்!

அவனுக்குநான் எத்தனாவது
காதலியோ?. ஒருவேளை
இருந்திருக்கலாம் முதல்காதலியுடன்!

அவன்புரிவது காதலோ,
கடமையோ எனக்குஅவனே
முதல்காதலன் கடைசிவரை!

அலட்சியமாய் சுவாசித்தான்
என்னை, - சுவாசிக்கப்பட்டு
சுவாசித்தேன் அவன்காதலை!

அவன்விரல்கள் எப்போதும்
என்மீதே இருந்தது.
அவனிதழ்கள் அவ்வப்போது!

இதழ்பட்ட நேரங்களில்,என்
அச்சம்,மடம் நானமெல்லாம்,
பொறுக்காமல் புகையானது!

இப்படி காதலில் முழ்கிப்பின்
மீண்டபோது மொத்தமாய்
கரைந்திருந்தது என்தேகம்!

அதுவரை அனையாமலிருந்த
காதலை,ஏனோ தெரியவில்லை
சட்டென்று அனைத்துவிட்டான்!

அனைத்தது மட்டுமில்லை
அதன்பின் அலட்சியமாய்
விட்டுவிட்டு விடைபெற்றான்!

மாடத்தில் தோழிகளுடன்
மகிழ்ச்சியாய் பொழுதை
கழித்திருந்த என்னை!

அவன் சில நொடி காதலுக்கு
இரையாக்கி பின் என்னை
குப்பையாக்கி சென்றுவிட்டான்!

அதுவரை புனிதமாயிருந்த
காதல், மாறியது
வலியாய் ரனமாய்!

அவனை போன்றோரின்
ஆசைக்கிணங்கி அழிவதற்காகவே
படைக்கப்பட்டது எங்கள் இனம்!

அவன்மீண்டும் வருவான்,
வேறொருவளை தோடுவான்,
பின்னென்னருகே வீசிடுவான்!

எங்கள்தேகம் அழித்து
வளர்த்த காதலின்புனிதத்தை
என்றாவதொரு நாள், உணர்வான்!

காதல் புரிந்து
கைவிட்டவன், அந்த காதலாலே
ஒரு நாள் அழிவான்!

அந்த நாள் அவன்தேகமும்
அனலாய் கொதிக்கும்,
எரியும், புகையும்!

அப்போது அவன் சொல்வான்,
"நான் அவளை
தொட்டிருக்கவே கூடாது" - என்று

--இப்படிக்கு,
சற்றுமுன் அடித்து,
அனைத்து, வீசப்பட்ட
ஒரு சிகரெட் !!!!!!!!

-கெ.கார்த்திக் சுப்புராஜ்.

Thursday, April 03, 2008

இங்கு கண்ணீர் விற்கப்படும்!!!

இப்போதெல்லாம்,.. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில்,...மாதவன்,அசின் உதவி இல்லாமல்,...வெற்றிகரமாய் விற்று காசாக்கப்பட்டு வருகிறது 'கலப்படமில்லா கண்ணீர்'....

முன்பு,..விளக்கு வைக்கும் நேரத்தில் ,..glycerine உதவியுடன் .. அழுது வடிந்த.... செல்வி, கஸ்தூரியின்.. போலி கண்ணிரை நாம் ரசித்து,..DRBயை உயர்த்தி, அவர்களை..நிஜ வாழ்கையில் சிரிக்க வைத்தோம்!!!,..

பிறகு.. படமில்லாத சிம்புவும்,..பப்லுவும்,..ஆட்டம் ஆடி ,..அடித்து கொண்டு,.. டயலாக் ஒப்பித்து... கண்ணிர் வடித்ததை ரசித்து.. படுத்து கிடந்த அவர்களின் மார்கெட்டை கொஞ்சம் ஏத்திவிட்டோம்!!!

அதை அனைத்து சேனல்களும் பின்பற்றியதால்,.. இன்று 'உண்ண உணவு' 'உடுத்த உடை' போல, 'ஜோடியோடு ஆடுவதும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது!!!

'நடுவர்களுக்கும்,..ஜோடிகளுக்கும்,.. நடக்கும் சண்டையை,.. நாமும் ஆர்வமாக எதிர்ப்பார்க்கிறோம்'

மேற்க்கூறிய அனைத்தையும் 'Good marketing Techinique' என்று சகித்துகொள்ளலாம்.. மக்கள் விரும்புவதை அவர்கள் விற்கிறார்கள்... அழுபவர்களும்,.. அடித்து கொள்பவரும்,..shooting முடிந்து வெளியே வரும்போது பணத்தோடும் புன்னகையோடும் தான் வருவார்கள்.
நாமும் பார்த்து விட்டு , பத்து நிமிடத்தில் மறந்திடுவோம்.

ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகள், சிலரது உண்மையான கண்ணிரையும்,.சோகத்தையும்,.. விளம்பரப்படுத்தி,..அதற்கு மக்கள் காட்டும் இரக்கத்தை, வருமானமாக மாற்றி வருகிறது..

ஒரு சேனலில் சிறுவர்களுக்கான திறமை போட்டி.எதோ ஒரு ஊரில் நடந்த தேர்வில்,.. அழகாய் உடையணிந்து பொம்மை போல் வந்திருந்தது ஒரு பாப்பா.சமீபத்தில் வெளியான ஒரு குத்து பாட்டுக்கு,..அந்த பாப்பா,..பாப்பா போலவே ஆடியது. முடிவு கூறும் நடுவர் "நல்லா அழகா Dress பண்ணிட்டு வந்திருக்க,..ஆனா Dance இன்னும் கத்துக்கனும்..அடுத்த தடவை நல்லா கத்துகிட்டு வா..சரியா" என்கிறார்.அதை கேட்கும் போதே கண்ணீர் வருகிறது அந்த சிறுமிக்கு.அரங்கத்தை விட்டு வெளியே செல்லும் சிறுமியை பின் தொடர்கிறது camera.பின்னனியில் மெல்லிசாய் ஒலிக்கிறது எதோ ஒரு சோக ராகம்.தன் அம்மாவிடம் ஒடி சென்று,.. குலுங்கி அழுகிறது.அதை Black and whiteலும்,..slow motionலையும் காட்டுகிறார்கள்.இரங்கல் செய்தி வாசிக்கும் குரலில், அந்த குழந்தையின் தோல்வியையும், கண்ணிரையும் வர்ணிக்கிறார் வர்ணனையாளர்.

இறுதியில்,..ஒரு clipping காட்டுகிறார்கள். 'வேரு ஒரு குழந்தையை நடுவர் நிராகரிக்கிறார்.அந்த குழந்தை அழுது கொண்டே,'இன்னும் ஒரு தடவை பாடுறேன்' என்கிறது.அழுது கொண்டே பாடத்தொடங்குகிறது.'அந்த குழந்தை தேர்வானதா?' என்கிற கேள்வியோடு,..
'காணத்தவறாதீர்கள் - அடுத்த வாரம்' என்கிறார்கள்.

அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில்,.. கஷ்டப்படும் மக்களுக்கு பல உதவிகள் செய்கிறார்கள்.நல்ல விசயம் தான்.சமிபத்தில் ஒரு ஊரில் differently abled பெண்ணை மேடைக்கு அழைக்கிறார்கள்,..அவர் தானாக நடந்து மேடை நோக்கி வருகிறார்.பின்னனியில் இளையராஜாவின் 'How to name it' ஒலிக்கிறது,..நம் மனம் கனக்கிறது...

உலகறிய தோல்வியடைந்து,..தன் அழுகை பல கோணங்களில் விளம்பரபடுத்தப்பட்ட,..அந்த குழந்தைக்கு,... இத்தனை பெரிய தோல்வி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.?

உடலளவில் மட்டும் குறையிருந்த அந்த பெண்ணுக்கு,.. அந்த சோக Build upம்,.. அதை பார்ப்பவர்களிடமிருந்து அவருக்கு கிடைக்கும் இரக்கமும்,. கருணையும்,.அவரது தன்னம்பிக்கையை எந்த அளவுக்கு சூரையாடிருக்கும் ?

நிகழ்ச்சி முடித்ததும், 'இந்நிகழ்ச்சியை வழங்கியோர்' என்று ஒரு குரல்...'காருக்குள் இருந்து சாருக்கான் சிரிக்கிறார்...'..
'சூர்யா styleஆக பைக் ஓட்டுகிறார்'....

கார்,..பைக்குடன் சேர்த்து விற்கப்படுகிறது.... ???????

ஒருவர் மீது மக்களிடம் இரக்கத்தையும்,..கருணையையும் உண்டாக்குவது,..அவரை புதைக்குழிக்குள் தள்ளுவத்தர்க்கு சமம்.

அன்புள்ள சன்,ராஜ்,விஜய் மற்றும் kalaingar களுக்கு,... வீட்டிலிருக்கும் பாதி நேரம், உங்களுடன் தான் கழிக்கிறோம்.. எங்கள் மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து தூக்கி விடாவிட்டாலும் பரவாயில்லை...
அவர்களின் கண்ணீரையும்,..சோகத்தையும் விற்று அவர்களை வீணடிக்காதீர்கள்,...

பணம் சம்பாதிப்பதுக்கு ஆயிரம் வழியிருக்கு......................!!!!!!!!!!!!

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative