காதல் வலி !!
என்றோ ஒரு நாள்,
''cofee break' அரட்டையிடையே,
அவளின் காதல் கதை கேட்கையில்,
ஆதரவாய் சில வார்த்தைகள்!!
முகம் தெரியாத அவளது
தந்தையின் காதல் அறியாமையை,
அனைவரும் திட்டி தீர்த்தபோது,
காணிக்கையாய் சில வசைகள்!!
மணிரத்னத்துக்கும், பாரதிராஜாவுக்கும்,
போட்டியாக - அவளுக்கு வீசப்பட்ட,
ஆயிரம் Ideaக்களில், என்னுடைய
பங்களிப்பாய் சில யோசனைகள்!!
என - ஆதரித்து, தோள் கொடுத்து,
தோழியின் காதல் வளர்த்தபோது,
கொஞ்சமும் உணரவில்லை,
காதல் கொடுக்கும் வலி !!
ஒரு வழியாய் போராடி,
மயிரிலையில் வெற்றிபெற்ற,
அந்த காதல் திருமணமேடையில்,
Photoக்கு போஸ் கொடுத்திருந்த,
அவளது தந்தையின்,
சம்பரதாய புன்னகைக்கு,
பின்னால் ஒளிந்திருந்த,
தோல்வியின் சுவடுகளுக்கும்,
60 வயதான அவரது பிடிவாதம்,
அன்று அடிமைபடுத்தி அடக்கம்
செய்யப்பட்டிருந்ததால், கலங்கிருந்த
அவரது கண்களுக்கும்,
நானும் ஒரு காரணம்,
என்றென்னியபோது,
ரணமாய் உணர்ந்தேன்,
அவள் காதலின் - வலி !!
-
கெ.கார்த்திக் சுப்புராஜ்