Thursday, October 18, 2007

கற்றது Computer!!!!

"வேதம் புதிது" படத்துல, ஒரு சீன்ல, குடுமி வச்ச ஒரு பையன் சத்யராஜிடம் ஏதோ கேள்வி கேட்க,...அது அவருக்கு யாரோ முகத்துல பளார் பளாருன்னு அறஞ்ச மாதிரி இருக்கும். அந்த மாதிரி ஒரு scene,..எனக்கு நிஜமாவே நடந்துச்சு..மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில்..

தமிழ் M.A (with Tax!!) / கற்றது தமிழ் (without tax!!).....படம் பார்த்த போது தான், இந்த பளார் பளார்!!,..அடி வாங்கியது நான்..அடிச்சது படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜீவா வாயிலாக,...director ராம்.எனக்கு மட்டும் இல்லை,..விட்டுக்கு ஒரு மரம் போல்,...பெருகி வரும்,..தகவல் தொழில்நுட்பவாதிகள் அனைவருக்கும் ..இந்த படம் ஒரு பளார் தான்....!!

நான் இங்கே எழுத நினைப்பது,...அந்த படத்தோட விமர்சனத்தை இல்ல,...'நாலு பேர் நானுத்தம்பது விதமாக பேசினாலும்',... கதை,.கதை சொன்ன விதம்,..பின்னனி இசை,..cinematography,..இவை அனைத்திலும்,..இந்த படம்,..ஒரு சிறந்த தமிழ் திரைப்படம்..!!!..ஆனால்,..நான் இங்கே எழுத நினைப்பது,..இந்த படம் பார்த்ததில் இருந்து என்னை உறுத்தும் சில கேள்விகள் பற்றி....

வளர்ச்சி என்பது,...உடல் முழுவதும் சீறாக இருந்தா..அது 'ஆரோக்கியம்'...மாறாக ஒரு பாகம் மட்டும் வளர்ந்தா,....அது 'நோய்'. கணினி தொழில் முலம்,..நாம் அடைந்து வரும் இந்த பிரம்மிப்பூட்டும் வளர்ச்சி,... ஆரோக்கியமா!!,...நோயா ???..Are we the cause of socio-economic instability/inequality in india ???...

'man hours,..schedule,..status report,..time log,...target date,..pointers..estimates..delivery..server...appraisal..objectives' என முழ்கி போய்,..கிடக்கும் எல்லோரும்..ஒரு நிமிடம்...log off பண்ணிட்டு...வானத்தை பார்த்தோ,..இல்ல ஒரு ஜன்னல் கம்பிய பிடிச்சிட்டு ரோட்டை பார்த்தோ,..யோசிக்க வேண்டிய விஷயம் இது!!!

மேலோட்டமா யோசிச்சோம்னா,..இது முட்டாள் தனமான கேள்விதான்னு தோனும்...,...எனக்கு தெரிஞ்சு..'நான்'..என் school mates,...college mates,...class mates,...room mates..friends,..friends'ஒட friends,..சொந்தகாரங்க....அப்படின்னு எவ்வளவோ பேரோட வாழ்க்கை தரம்,...கடந்த சில வருசங்கள்ல முன்னேறிருக்கு..,..எவ்வளவோ விசயங்கள் மாறிருக்கு....

பல Line வீடுகள்.. அடுக்கு மாடியாக,

பல Hercules'கள் .. Pulsar' ஆக

பல 1100'கள் .. N72' வாக..

பல IInd sleeper.. 3 tier AC' யாக..,

பல house rent'கள்... Monthly EMI'ஆக,...

பல Middle class'கள்...'Upper middle Class'களாக.....

GDP 7.5%...8.1%'ஆக

என மகிழ்ச்சி தரக்கூடிய,.. பல மாற்றங்கள் நடந்திருக்கிறது... இதற்கு 'ஒரே காரணம்' என்று கூற இயலாவிட்டாலும்,...முக்கியமான காரணம்,.. 'Software..BPO..Outsourcing..' துறைகளின் வளர்ச்சி!!...

தினமும் காலையில் பார்க்கிலும்...பீச்சிலும்,..ரோட்டிலும்.. கதை பேசிக்கொண்டு,..சந்தோசமாய்,..
walking செல்லும் 'அப்பாக்களின்',.. 60% பேரின்,.. தூக்கி விடப்பட்ட காலருக்கும்,..நிம்மதியான புன்னகைக்கும்.. பின்னால் இருப்பது,.. 'எதோ ஒரு 'software engineer',..Team lead..System acrhitect,..Project manager' கள் தான்.

இப்படியிருக்க,.. எப்படி அப்படி சொல்லலாம்,.. ??,.. அதாவது 'இந்த வளர்ச்சி ஒரு நோய்'னு...

..'what crap??.,..absurd..question'.. அப்படின்னு இந்த matter'a விட்டுடாம,...இன்னும் கொஞ்சம் யோசிச்சு பார்த்தோம்னா,.. இந்த மாற்றங்கள்,...எங்கோ,..யாருக்கோ..கசப்பான ஒரு மாற்றமாகத்தான் இருந்திட்டிருக்கு என்பது தான் உண்மை...

இந்த வளர்ச்சிக்கும் ,மாற்றத்துக்கும்...ஈடு கொடுக்க முடியாமல் தொலைந்து போன மனிதர்கள் எத்தனையோ பேர்...

cofee day'..barista' வந்தது,... 'விசாலம் காபி பார்'..'பாண்டியன் ஜுஸ் சென்ட்ர்'கள்..தொலைந்து போனது!!!

'Allen solly'..Levis..வந்தது.. 'A-tex',..'G-tex',..'Super tailors'..தொலைந்து போனது!!

'spencers daily..'reliance fresh'..வந்தது,.. 'வெங்காய பாட்டி',..'பழக்கார அக்கா',..தொலைந்து போனார்கள்..

இப்படி,..சில வருடங்களுக்கு முன்னால் நாம்,..தினமும் சந்தித்து வந்த பல மனிதர்கள்,..இன்றைக்கு எங்கே,..எப்படி இருக்கிறார்கள்?..

இருப்பார்கள்!!,...

எகிறும்,.. வீட்டு வாடகை,..school fees,..விலைவாசி...என,..'upper class' compatible''ஆக மாறிவரும் இந்த நகரங்களில்,... எங்கோ ஒரு முலையில் போராடிக்கொண்டுதான் இருப்பார்கள்...

நகரங்களில் மின்னும் sodium vapour'களுக்கும்,..'Hoarding'களுக்கும்,..நடுவே வாழ்கையை 'இருள் சூழ' நடத்திக் கொண்டிருப்பார்கள்...

'Apartment' ,..'Technology Park',.. 'Pub'..'Shopping mall'..'Multiplex'களில் உள்ளே இருந்து கொண்டு,.இந்த உலகை ரசித்து வரும் நம் கண்களுக்கு தெரியாமல்..மேற்கூறிய அதே இடங்களின் வெளியே,..ஏக்கத்தொடும் எரிச்சலோடும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்!!

இவர்களின் இந்த நிலைக்கு காரணம் யார்?....இதற்கு 'ஒரே காரணம்' என்று கூற இயலாவிட்டாலும்,...முக்கியமான காரணம்,.. 'Software..BPO..Outsourcing..' துறைகளின் வளர்ச்சி!!...

தினமும் ரோட்டிலும்,..பிளார்ட்பாரத்திலும்...விரக்தியோடும்..வேர்வையோடும்..நடந்து செல்லும் இவர்களின்,.. 60% பேரின் சோர்ந்த தோலுக்கும்,..முகத்தில் உள்ள சோகத்திற்கும் பின்னால் இருப்பதும்,..'எதோ ஒரு 'software engineer',..Team lead..System acrhitect,..Project manager' கள் தான்.

இந்த appraisala,.. 20% hike இல்லேன்னா,..'i am quitting',..என HR இடம் மிரட்டும் நாம்,...நம் வீட்டு driver'க்கும்..servant'க்கும் எத்தனை வருசத்திற்க்கு ஒரு முறை Hike கொடுக்கிறோம்?,..எத்தனை % கொடுக்கிறோம்?

2000 ருபாய் விலையில் Levis jeans பேசாம வாங்கிக்கொண்டு,...பிளார்ட்பாரத்தில் kerchief' விற்பவனிடம் பேரம் பேசிகிறோம்...

"Hello,.. How can i help you?,.." என்று clients இடம்,...ஆயிரம் முறை கேட்கும்,..நாம்,..எத்தனை முறை அது மாதிரி நம்மை சுற்றியுள்ளவர் களிடம் கேட்டிருப்போம்??

வீட்டு வாடகை 8000,..LKG fees 10000 ருபாய்,.. cinema ticket 100 ருபாய்..bus ticket 5 ருபாய்,... petrol 58 ருபாய் என 'cost of living' உயர்ந்து கொண்டே தான் போகிறது,..நாமும் ஒரு 'அய்யோ' ..ஒரு 'உச்' கொட்டி விட்டு,...அந்த விலையை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்,..'வருசத்திற்கு 1 லச்ச ருபாய் சம்பள உயர்வு காணும்,..நமக்கு,. இந்த 5 ருபாய்,..1000 ருபாய் விலை உயர்வு எந்த பாதிப்பும் கொடுப்பதில்லை,....ஆனால்,..இந்த 5 ருபாய் விலை உயர்வு,..யெத்தனையோ பேரின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது,..எத்தனையோ குடும்பங்களை இந்த நகரங்களை விட்டு ஓட வைக்கிறது!!...

ஆக,.. 'socio-economic inequality' நிலவுவதற்க்கு,..'ஒரே காரணம்' என்று கூற இயலாவிட்டாலும்,...முக்கியமான காரணம்,.. 'தகவல் தொழில்னுட்பவாதிகள்!!!!!

வளர்ச்சி என்பது,...உடல் முழுவதும் சீறாக இருந்தா..அது 'ஆரோக்கியம்'...மாறாக ஒரு பாகம் மட்டும் வளர்ந்தா,....அது 'நோய்'..

ஆம்,..நாம் காணும் இந்த வளர்ச்சி ஒரு நோய் தான்.
இந்த நோய்க்கு தீர்வு,.. 'வளர்ச்சியை நிறுத்துவது அல்ல,..வளராமல் இருப்பவர்களுக்கு எதோ ஒரு விதத்தில் கை கொடுப்பது!!...

10th stdல படிச்ச 'Survival of the fittest' theory தான் ஞாபகம் வருது.

Let us survive and let others survive!!!

"என்னால் எங்கோ எப்போதோ,..விரட்டப்பட்டு,..ஏக்கப்பட்டு..வீழ்த்தப்பட்ட என் முகம் தெரியாத நண்பனே,

என்றாவது,..உன் முகம் தெரிந்தால்,..

உனக்கு உதவ வழியும் தெரிந்தால்,..

நீ வளர கண்டிப்பாக கை கொடுப்பேன்,...

இப்போது,... என் client வளர ,..software எழுத செல்கிறேன்,

மண்ணித்துக் கொள் -- ஏன்னா,.

நான் 'கற்றது - computer' மட்டுமே!!!...

Creative Commons License
All videos,writings,photos in this blog by G. karthik subbaraj is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative